| இந்தியில் மங்காத்தா |
|
|
|
| Written by Administrator |
| Tuesday, 24 January 2012 01:34 |
|
இந்தியில் மங்காத்தா
கிளவுட் நைன் தயாரித்த மங்காத்தாவை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுவதாக இருந்தது. கடைசி நிமிடத்தில் படம் ராடன் மீடியா வழியாக விநியோகிக்கப்பட்டது.
முதல் ஒப்பந்தத்தின் போதே படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கேட்டிருந்தாராம் ஞானவேல். அதன்படி அவருக்கே ரீமேக் உரிமையை தந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ஞானவேலின் ஸ்டுடியோ கிரீனே இந்தியில் தயாரிக்கப் போகிறதாம். கார்த்தி நடித்துவரும் சகுனி படத்துக்குப் பிறகு இந்தி ரீமேக் வேலையை துரிதப்படுத்த உள்ளனர். |



